#image_title
பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி, தினேஷ், அர்ச்சனா, ஜோவிகா, பூர்ணிமா, ஆர்.ஜே.பிராவோ, கானா பாலா, கூல் சுரேஷ், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், நிக்சன், அக்ஷயா, ஐஷூ, மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், விசித்ரா என மொத்தம் 23 பேர் களம் கண்டனர். இதுவரை வந்த எந்த சீசனிலும் இத்தனைப் பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டினுள் சென்றதில்லை.
#image_title
இரண்டு வீடு, ஒரே கிச்சன் என புதுமையான அம்சங்களுடன் தொடங்கிய இந்த சீசனில் பல போட்டியாளர்கள் இடை இடையே வீட்டினுள் வந்தனர். அதில் பலர் ஜொலித்தனர், பலர் அமைதியாகவே சென்று விட்டனர். கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி இறுதிச் சுற்று நடைபெற்றது. இறுதியாக மாயா கிருஷ்ணன், மணி சந்திரா மற்றும் வி.ஜே.அர்ச்சனா ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதில் வி.ஜே.அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
#image_title
எப்போதுமே பிக்பாஸ் சீசன் ஒவ்வொரு ஆண்டும் வரும் போது நிச்சயம் பிரச்னைகளும் வரும். அப்படி இந்த வருடமும் பல பிரச்னை, சச்ரவுகளுக்கு மத்தியில் பிக்பாஸ் முடிந்திருக்கிறது. பாதியில் சென்ற அர்ச்சனாவுக்கு பதில் 105 நாட்கள் வீட்டில் இருந்த மணி சந்திராவுக்கு இந்த டைட்டில் சென்றிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிக்பாஸை முடித்துவிட்டு நேர்காணல் கொடுத்திருந்த மணி சந்திரா, வீட்டினுள் யார் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்கள் என்பதற்கு பதில் அளித்துள்ளார்.
#image_title
அதன்படி, திணேஷ் எதையுமே உண்மையாக வெளிப்படையாக கூறி வந்ததாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து விஷ்ணுவும் ஏதேனும் கோபப்பட்டாலும் பிறகு அதற்கு வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களை தவிரித்து பலர் விளையாட்டுக்காக பொய்யாக இருப்பதாக தெரிவித்ததாகவும், கூல் சுரேஷ், ரவீனா போன்றோர் உண்மையாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…