குளியலறையில் இருந்து வந்த துர்நாற்றம்… அதிர்ந்து போன போலீஸ்… காதலிக்காக புது மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… காதலியுடன் ஸ்கெப்… நேபாள பார்டரில் காத்திருந்த அதிர்ச்சி…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மனேசர் பகுதியில், திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில் காதலியுடன் சேர்ந்து வாழ மனைவியைச் சுட்டுக் கொன்ற கணவனும் அவனது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனேசரைச் சேர்ந்த அங்கித் (25) என்பவருக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே 21 அன்று அந்தப் பெண் திடீரென காணாமல் போனதை அடுத்து, அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது, மனேசரில் உள்ள ஒரு வாடகை அறையிலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அங்கித்திற்கும் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி தேவி (38) என்ற பெண்ணிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த கள்ளத்தொடர்பே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

தங்களது சட்டவிரோத உறவிற்குத் தடையாக இருந்த மனைவியைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்ட அங்கித், இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே உத்தரப் பிரதேசத்தில் இருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளார். திட்டமிட்டபடி ரஜினியின் வாடகை அறைக்கு மனைவியை அழைத்துச் சென்று, இருவரும் சேர்ந்து அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். கொலைக்குப் பிறகு போலீஸாரிடமிருந்து தப்பிக்க ஹரித்வார் வழியாக நேபாளத்திற்குச் சென்று தலைமறைவாகியுள்ளனர். கடந்த ஜூன் 30 ஆம் தேதி நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்பிய இந்த கொலைகார ஜோடியை மனேசர் குற்றப்பிரிவு போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.