மும்பையை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனை தன்னுடைய செல்லப்பிராணி நாயான பிட்புல் நாயை கடிக்க விட்டு தாக்கி காயப்படுத்தும் போது நபர் ஒருவர் சிரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 year old boy attacked by pit bull in Mumbai,dog owner booked.
Mankhurd police registered a case against Mohammad Sohail hasan who was arrested on Friday and later released after being served a notice.#Mumbai @MankhurdPS @CPMumbaiPolice @MumbaiPolice pic.twitter.com/hsNEqN6Nd1
— Indrajeet chaubey (@indrajeet8080) July 20, 2025
காயமடைந்த அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாற்றப்பட்ட சோஹைல் ஹசன் கான் (43) கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவன் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது சோஹைல் ஹசன் கான் தன்னுடைய நாயை அவிழ்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
