மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மோகம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாகவே உள்ளது. செல்போன் பார்த்து விட்டால் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு செல்போனில் மூழ்கி விடுகின்றனர். குறிப்பாக ரீல்ஸ் பார்க்கும்போது தங்களை சுற்றி நடப்பதை அவர்கள் அறிவதில்லை. அப்படிதான் ஒரு சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பேதுல் ரயில் நிலையத்தில் 66 வயது முதியவர் ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் செல்ல வேண்டிய ரயிலை கவனிப்பதற்கு பதிலாக செல்போனை வைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ரயில் மெல்ல மெல்ல நகரத் தொடங்கிய நிலையில் அனைவரும் ரயிலில் ஏறிவிட்டனர். ஒரு கட்டத்தில் ரயில் வேகமாக செல்ல சற்று நிமிர்ந்து பார்த்த அந்த முதியவருக்கு தான் செல்லும் ரயில் வேகமாக செல்கிறது என தெரிந்துள்ளது. இதனால் உடனடியாக ரயிலை பிடிக்க வேண்டும் என்று அவர் ஓடிய நிலையில் கால்கள் தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் முதியவரை அங்கிருந்த ரயில்வே போலீஸ் பிடித்து இழுத்து காப்பாற்றினார். சற்று அசந்திருந்தால் அந்த இடத்திலேயே முதியவரின் உயிர் போயிருக்கும். தற்போது இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Quick action saves a life!#RPF Constable Satya Prakash Rajurkar at #Betul station rescued a 66-year-old man who slipped while trying to board the moving train.
Brave effort that prevented a tragedy.
Avoid distractions like mobile phones at stations.
Alertness is your best… pic.twitter.com/SKGjwG9HHW— RPF INDIA (@RPF_INDIA) July 18, 2025
