அடேங்கப்பா..! வேற லெவல்…! போலீஸ் வாகனத்திலேயே ரீல்ஸா?… இளைஞர் செய்த காரியம்… இன்ஸ்டாவை தெறிக்கவிடும் வீடியோ…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

மும்பை காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ஹரிஜன் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், காவல்துறையின் எஸ்.யு.வி வாகனத்தின் கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, ஸ்டீயரிங்கை பிடித்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவில் ‘டாடிஸ் ஹோம்’ என்ற பின்னணி இசையும் சேர்க்கப்பட்டிருந்தது நெட்டிசன்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, சமூக வலைத்தள வாசிகள் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சாதாரண நபர் எவ்வாறு காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது என்றும், அவருக்கு காவல் துறையுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த குறிப்பிட்ட ரீல்ஸ் கணக்கிலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

இந்தச் சம்பவம் எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தோ அல்லது சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதேனும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ மும்பை காவல்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்புதான் மும்பை கடலோரச் சாலையில், சாவியுடன் நின்றிருந்த போலீஸ் வாகனத்தை ஒருவர் திருடி தவறான பாதையில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது காவல் துறை வாகனத்தில் ரீல்ஸ் செய்த சம்பவம் மீண்டும் பாதுகாப்பு மற்றும் அலட்சியம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.