ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பானிஹால் – குவாசிகுண்ட் சுரங்கப்பாதை அருகே ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த அங்கிருந்த CRPF 163-வது பட்டாலியன் வீரர்கள், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மீட்புப் பணியில் இறங்கினர். இந்த இக்கட்டான சூழலில் வீரர்கள் காட்டிய சமயோசித புத்தி அங்கிருந்தவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை காத்திருந்தால் அந்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த வீரர்கள், அவருக்கு உடனடியாக அந்த இடத்திலேயே சிபிஆர் (CPR) சிகிச்சையை வழங்கினர். வீரர்கள் மாறி மாறி நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் கொடுத்து முதலுதவி செய்ததன் விளைவாக, அந்த நபரின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது. இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலுதவிக்குப்பிறகு அந்த நபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “மக்களின் சேவையில் எப்போதும் நாங்கள்” என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்ட CRPF வீரர்களின் இந்தச் செயலை நெட்டிசன்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…