“நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும்”… முஸ்லிமா மாறிடு… மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபர்..!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஷேக்ரைஸ் (42) என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த பாக்கியஸ்ரீ என்ற 35 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அடிக்கடி இவர் அந்த பெண்ணிடம் தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாக்கியஸ்ரீ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடும் கோபத்தில் இருந்த ஷேக் நேற்று இரவு அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரிடம் மீண்டும் மதமாற சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதை பாக்கியஸ்ரீ ஏற்றுக்கொள்ளாததால் அவரது தலை முடியை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சரமாரியாக வயிற்றில் சுத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷேக் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago