உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஜிம்முக்குச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, பிணத்துடன் கணவன் 7 மணி நேரம் அமர்ந்திருந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காசியாபாத்தின் ஷாலிமார் கார்டன் பகுதியில் வசிக்கும் 32 வயதான தருண் மற்றும் அவரது மனைவி அன்சு (29) ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, மனைவி அன்சு ஜிம்முக்குச் செல்லத் தயாராகியுள்ளார். ஆனால், தருண் அவரை ஜிம்முக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற தருண், அங்கிருந்த ஒரு கம்பியால் அன்சுவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அன்சு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு போலீசுக்கு பயந்த தருண், என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே சுமார் 7 மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துள்ளார். பின்னர், அவரே தனது சகோதரருக்கு போன் செய்து நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார். அவரது சகோதரர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தருணைக் கைது செய்தனர். இவர்களுக்கு 3 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…