நெல்லையில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான மாரிமுத்து (26). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மாரிமுத்துவை கண்டித்ததுடன் அவரிடம் இருந்து மகளை விளக்கி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்த மாரிமுத்து ஜாமினில் வெளிவந்துள்ளார்.
மீண்டும் சிறுமியிடம் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கிய நிலையில் சம்பவத்தன்று மாரிமுத்து வெளியே போகலாம் என்று கூறி சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மரத்தடியில் சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். கஞ்சா போதையில் இருந்த மாரிமுத்து சிறுமியிடம் பணம் கேட்டதாகவும் சிறுமி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து நீ இது பற்றி யாரிடமும் சொல்லிவிட்டால் உனக்கு கேடு என்று மிரட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் மாரிமுத்து தனது கைகளால் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு போதையில் இருந்த மாரிமுத்து சிறுமியின் சடலத்துடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அணிந்திருந்த உடை மற்றும் உடல் உறுப்புகள் மேலிருந்த நகக்கிரல்களும் வெறித்தனமான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆசை இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…