ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ், திருப்பதியில் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீனிவாச ராவ், திருப்பதியை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டியிடம் ரூ. 5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். ஸ்ரீனிவாச ராவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. ஸ்ரீனிவாச ராவுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார்.
ஸ்ரீனிவாச ராவ் வாங்கிய கடனை வசூலிக்க, ஈஸ்வர் ரெட்டி வேறு திட்டம் தீட்டியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, ஸ்ரீனிவாச ராவின் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவரிடம் “உன்னுடைய தந்தை என்னை அனுப்பி வைத்திருக்கிறார். உன்னை அழைத்து வர கூறினார்” என்று கூறி சிறுமியை அழைத்துச் சென்றார். சிறுமையை அழைத்துச் சென்ற பின், தொலைபேசி வழியாக ஸ்ரீனிவாசராவை தொடர்பு கொண்டு, “உன்னுடைய மகள் என்னுடன் இருக்கிறார், உடனே கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் மகளை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.
பள்ளி மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து உடனடியாக ஈஸ்வர் ரெடியை கைது செய்துள்ளனர்.
பணப் பரிமாற்றத்தின் போது ஈஸ்வர் ரெட்டியுடன் ஸ்ரீநிவாச ராவுக்கு நட்பு ஏற்பட்டது. தனது தந்தையுடன் அடிக்கடி பார்த்ததால் மகளும் அவர் வார்த்தையை நம்பி சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகள் உதவியுடன், ஈஸ்வர் ரெட்டியை கைது செய்து விட்டோம். சிறுமி பத்திரமாக அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார், என காவல் ஆய்வாளர் சுப்பாராவ் கூறினார்.
