“மனைவியுடன் வாழ முடியாத விரக்தி”… ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தந்தை விபரீத முடிவு…. சேலத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 13, 2026

Spread the love

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமாருக்கும் (27) அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் அவரது மனைவி, ஒன்றரை வயது ஆண் குழந்தை சாய் ரித்விக்குடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜயகுமார் குழந்தையைத் தன்வசம் அழைத்துச் சென்றார். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியிலும், குடும்பப் பிரச்சினைகளாலும் மனம் உடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி – வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சென்ற அவர், மனைவியையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் முடிவெடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் தனது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையுடன் அவர் பாய்ந்து விபரீத முடிவெடுத்தார். இந்த கோர விபத்தில் தந்தையும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த ஈரோடு ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சினை காரணமாக தந்தை தனது பச்சிளம் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.