உலகில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதுமையான முயற்சிகளை எதிர்காலத்திற்கான நிலையான தீர்வுகளை வழங்குகின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரை சேர்ந்த சார்டடட் அக்கவுண்டன்ட் விகாஷ்குமார் உருவாக்கிய இயற்கை நீச்சல் குளம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமான நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடிய குளோரின் நீர் கண்களுக்கு எரிச்சல், முடி உதிர்வு, மூச்சுக்குழாய் பிரச்சனை போன்ற சிக்கல்களை உருவாக்கும்.
இதனை தவிர்ப்பதற்கு விரும்பிய விகாஷ் தன்னுடைய பண்ணை வீட்டில் மண், கற்கள், தாவரங்கள் மற்றும் இயற்கை பாக்டீரியாக்கள் ஆகியவற்றை கொண்டு கெமிக்கல் இல்லாத நீச்சல் குளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் சிமென்ட் அல்லது பிளாஸ்டிக் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. நீர் சுத்திகரிப்பு குறைந்த சக்தி கொண்ட பம்ப் மூலமாக இயற்கையாகவே நடைபெறுகின்றது.
தன் மகனுக்காக தொடங்கிய முயற்சி வணிகமாக மாறிய நிலையில் விகாஷ் Biosphere என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஐரோப்பாவில் பிரபலமான பயோஸ்விம் பாண்ட் முறையை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், தனியார் வீடுகள் ஆகிய இடங்களுக்கு இயற்கை நீச்சல் குளங்களை வடிவமைத்து வழங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு குலமும் சுமார் 45 நாட்களில் முடிக்கப்படுகின்றது.
மேலும் சிறிய ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற கூடுதல் வசதிகளும் உள்ளன. பராமரிப்பு செலவு குறைவாக உள்ள நிலையில் பிகாஸ் ஆண்டுக்கு மூன்று கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகின்றார். நீரை சிக்கனமாக இயற்கையை காப்பதற்கும் உதவும் இந்த முயற்சி இந்தியாவின் எதிர்கால தண்ணீர் மேலாண்மைக்கு புதிய பாதையை உருவாக்கியுள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
