தமிழக மக்களே… புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… வெளியான ஷாக் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.  இந்நிலையில் மகளின் உரிமை தொகை திட்டத்தில் இணையவே புதிதாக பலரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவது தாமதமாகி வருகிறது. இதனால் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். புதிதாக ஆயிரம் ரூபாய் பெறுபவர்களின் பட்டியல் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் இன்னும் ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள் இந்த முறை 1000 ரூபாய் பெற வாய்ப்பு இல்லை என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.