திக் திக் திக்… திறந்தவெளி மரணக் குழி… ஆட்டோ மோதி தலைகீழாக விழுந்து நபர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் CCTV வீடியோ…!

By Swetha on ஐப்பசி 18, 2026

Spread the love

புனேவின் எரவாடா பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே மாநகராட்சி வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி குழியில் விழுந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரின் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த மோதலுக்குள்ளான அவர், அருகில் பாதுகாப்பு தடுப்புகளின்றி திறந்தவெளியாக விடப்பட்டிருந்த வடிகால் குழியில் தலைகீழாகக் கீழே விழுந்துள்ளார்.

   

https://twitter.com/nextminutenews7/status/2111733783263412494/video/1

   

விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற பணிகள் குறித்த கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.