ஐயோ கடவுளே… கரும்பு லோடுக்கு கீழே சிக்கிய நபர்… கண் எதிரே நேர்ந்த கோர விபத்து… ஒரு செகண்ட் லேட் ஆகியிருந்தா உயிர் போச்சி?… நெஞ்சை அதிரவைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஐப்பசி 18, 2026

Spread the love

கர்நாடகா மாநிலம் பீடார் மாவட்டத்தில் உள்ள மேன்ஹள்ளி – பாரூர் சர்க்கரை ஆலை சாலையில், கரும்பு லோட் ஏற்றி வந்த டிராக்டர் டிராலி ஒன்று திடீரென நிலைதடுமாறி சாய்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது கரும்பு மூட்டைகள் அனைத்தும் மொத்தமாக விழுந்தன. இந்த பைகீர் விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு மூட்டைகளுக்குள் ஓட்டுநர் சிக்கிக் கொண்டதைக் கண்டதும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சற்றும் தாமதிக்காமல் கரும்புகளை விரைவாக அப்புறப்படுத்தி, அடியில் சிக்கியிருந்த நபரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மக்களின் இந்த உடனடி உதவியால் அசம்பாவிதம் மற்றும் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

   

https://twitter.com/AbhishekJalan26/status/2111774295521435921/video/1

   

இந்த விபத்துக்கு மோசமான சாலை நிலைமையே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேன்ஹள்ளி – பாரூர் ஆலை சாலை கடந்த இரண்டு மாதங்களாகவே மிக மோசமான நிலையில் உள்ளது என்றும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும் விபத்துகள் நடக்கும் முன், துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.