ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் வியாழக்கிழமை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி 65 வயது பெண்ணை கங்காபூர் நகரப் பகுதிக்கு அழைத்துச் சென்று, பின்னர் காட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது கால் விரல்களை வெட்டி, 1.5 கிலோ வெள்ளி வளையல்கள் திருடப்பட்டன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டார். தற்போது போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மூல்சந்த் ரேகரின் மனைவி கமலா தேவி (65) பமன்வாஸ் பகுதியில் வசிப்பவர். அவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்கிறார்.
இந்நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் அவரை அணுகி கங்காபூர் நகரில் தொழிலாளியாக வேலை வழங்குவதாக கூறி அக்டோபர் 8 ஆம் தேதி, அதே இளைஞன் கமலா தேவியை அழைத்து கங்காபூர் நகரத்திற்கு அழைத்து சென்றுள்ளான். கமலா, அவரது மருமகள் சீமா மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அவரோடு சென்றுள்ளார்கள். அப்போது தான் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
