சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் ஆடை இல்லாமல் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரெனத் தடுத்து நிறுத்திச் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்படும் அந்த நபர், அவ்வழியாகச் செல்லும் நபர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறார்.
அங்குச் சென்ற இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானவரைக் காப்பாற்ற முயன்ற போது, அந்த நபரையும் அவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். குடும்பப் பிரச்சினை அல்லது வறுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் இந்த நபரை உடனடியாகக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலோ அல்லது மனநலக் காப்பகத்திலோ சேர்க்க வேண்டும் என்றும், இவர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றும் கூறி நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனப் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
