கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பகிரப்பா (28) என்பவருக்கும், ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைப் பார்ப்பதற்காக ராஜேஸ்வரி தாய் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். இதற்குப் பகிரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பகிரப்பா, வீட்டில் இருந்த கயிறால் ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து பகிரப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…