டீ குடிக்க சென்ற பெண்…! அந்தரங்க பகுதியில் தொட்டு மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on கார்த்திகை 20, 2025

Spread the love

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியில், தனியார் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் 31 வயதுப் பெண், டீ கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் அந்தரங்க பகுதியில் தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பெண் கேட்டதும் மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர், ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் கொண்ட மோசஸ் (எ) அப்பு (25) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல, சென்னை வியாசர்பாடியில் இரவு நேரங்களில் பெண்களைக் குறிவைத்து கத்தியைக் காட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அப்பாஸ் மொய்தீன் (20), சஞ்சய் (24), மற்றும் சரவணன் (24) என்பது தெரிய வந்தது.

   

அவர்களிடமிருந்து மூன்று கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட அப்பாஸ் மொய்தீன், தான் காதலித்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்ய இருந்ததால், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததும் அம்பலமானது. இந்த மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.