திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள பஜாரில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமாக அதிர்ஷ்ட கோல்டு கம்பெனி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ஒரு மணி அளவில் பாண்டு கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தன்னிடம் உள்ள நான்கு சவரன் தங்க காப்பை விற்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார் .அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்பதால் காப்பை விற்கிறேன் என்று கூறி நைசாக பேசி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு 3 லட்சம் பணத்தை வாங்கிவிட்டு சென்றுள்ளார் .
இதனையடுத்து 10 நாட்கள் கழித்து விஜய் கொண்டு வந்திருந்த தங்க காப்பை உருக்கிய போது அது தங்கம் முலாம் பூசிய இரும்பு உலோகம் என்பது தெரிய வந்தது. இதனை நகைடை ஊழியர் அதிர்ச்சி அடைந்தார் . உடனே இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது தங்கம் முலாம் பூசப்பட்ட இரும்பு காப்பை கைமாற்றி பணம் பார்த்ததும் ஒரு வாரத்தில் விஜய் கம்போடியா நாட்டிற்கு பறந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தப்பியோடிய விஜய்யை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
