பிரபல இயக்குநருடனான காதலை அறிவித்த மாமன்னன் பட நடிகை ரவீனா ரவி…. ரொம்ப வருத்தத்தில் இளம் ரசிகர்கள்…!!

By Soundarya on ஐப்பசி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் உள்ளவர்தான் நடிகை ரவீனா. இவர் லவ் டுடே திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைப் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாமன்னன் திரைப்படத்திலும் பகத் பாஸில் மனைவியாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்தில் இவருக்கு ஒரு டயலாக் கூட இல்லை.

#image_title

ஆனால் பகத் பாசியில் மற்றும் ரவீனா ரவி இடையே கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரவீனா தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.  இவர் முதன்முதலாக சாட்டை படத்தில் டப்பிங் செய்தார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.

   
   

#image_title

 

காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா ஜெபாஸ்டியன், ராசி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் ரவீனா ரவி, வாலாட்டி என்னும் செல்ல பிராணியான நாய் படத்தை இயக்கிய இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரை காதலித்து வருகிறாராம்.

#image_title

இதனை அடுத்து தீபாவளி ஸ்பெஷல் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலரை ரவீனா ரவி அறிவித்துள்ளார். ஏற்கனவே காவல் துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் ஹீரோவோடு மாலையுடன் இருந்ததை பார்த்து இவருக்கு திருமணம் ஆகி விட்டதா என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் அது படம் என தெரிந்ததும் நிம்மதி அடைந்தார்கள். தற்போது இளைஞர்கள் இந்த அறிவிப்பை பார்த்தவுடன் வருத்தமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.