அதிமுக முதன்மை பொதுச் செயலாளர் துரை வைகோவிற்கும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பதவி ராஜினாமா செய்வதாக துரை வைகோ அறிவித்தார். வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்த பிறகு துரை வைகோ தன்னுடைய முடிவை வாபஸ் பெற்றார், இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவில் பலகாலம் எனக்கு துணையாக மல்லை சத்யா இருந்தார். ஆனால் சமீபத்தில் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை. கட்சியிலிருந்து வெளியேறிய நபர்களோடு தொடர்பில் இருக்கிறார்.
பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்து போல மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார். கட்சியிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்றாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம். கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசினார். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய மல்லை சத்யா குடும்ப அரசியல் எதிர்த்து கட்சி தொடங்கி வைத்த துரை வைகோவுக்கு கட்சி தலைமை வழங்குவதற்கு தயாராகிவிட்டார். இதுவரை அவருடைய உயிரை 3 முறை காப்பாற்றி இருக்கிறேன். இப்போது வைகோ தன்னுடைய மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்ற பார்க்கிறார்” என்று கூறியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு தொடர்பான புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…
டெல்லியில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ₹993 உயர்த்தப்பட்டு, இன்று முதல்…
ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த மத்திய…
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் (IRFC) காலியாக உள்ள…
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-ஆவது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் 5-ஆவது மற்றும் 6-ஆவது ஊதியக்…