“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ‘NEWME’ என்ற ஆடை நிறுவனம், தங்களின் குறிப்பிட்ட கடைகளில் முதலில் வரும் 100 முதல் 125 வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு ஒரு ஆடை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த சலுகையைப் பெறுவதற்காக, அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாலின் வாசலில் குவியத் தொடங்கினர்.

அங்கு திரண்ட கூட்டத்தின் நெரிசல் காரணமாக, மாலின் ஊழியர்களால் கடையின் ஷட்டரைக்கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில், கடையின் வாசலில் மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதும், பாதுகாப்புப் பணியாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதும் தெரிந்தது. இதையடுத்து, மாலில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதைத் தடுக்க உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

   

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த 1 ரூபாய் சலுகை ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் கடை மூடப்பட்டிருக்கும் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டம் மெதுவாக கலைந்து சென்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகவும் ‘NEWME’ நிறுவனம் மற்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.