திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சமீபகாலமாக மதிமுகவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துகள் திமுகவிற்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் இருந்து வந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜய் நேரில் சென்று வைகோவை சந்தித்ததைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் ஊகங்கள் வெளியாகி வந்தன. இந்நிைலயில், இன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு மற்றும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விலகல் முடிவு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவின் இந்த விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டனர். மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதை வரவேற்கும் விதமாக, அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக திமுகவினர் தீவிர கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

   

முன்னதாக நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோருக்கு திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் ஆதரவோடு வெற்றி பெற்ற துரை வைகோவிற்கு எதிராக திமுகவினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

   

துரை வைகோ தங்களது கட்சியின் தொண்டர்களுடைய கடின உழைப்பைத் திருடி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டு, தற்போது தங்களுக்கு எதிராகவே செயல்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் திருச்சி எம்.பி. பதவியை துரை வைகோ உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ள சூழலில், தங்களது எதிர்கால தேர்தல் கூட்டணி குறித்த முடிவை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என மதிமுக தலைமை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப் படுகிறது.