சென்னையில் பயங்கரம்..! “தலை எங்கே..?” பிளாட்பாரத்தில் கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு சூட்கேஸிலிருந்து, தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பயணிகள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் இந்த ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சூட்கேஸ் நீண்ட நேரமாக இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே எஸ்.பி. மற்றும் போலீஸார், அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது அதற்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இக்கொடூர கொலை சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக, உயிரிழந்த நபர் யார், அவர் எங்கு கொலை செய்யப்பட்டார் மற்றும் உடலைக் கொண்டுவந்து போட்ட மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிய ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலையின் பின்னணி குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.