CINEMA
தமிழ் ஹீரோக்களோடு இணைந்து ஹிட் படங்களை கொடுத்த மலையாள நட்சத்திரங்கள்.. யார், யாருன்னு தெரியுமா..?
முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்றாலே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருந்து மலையாள நடிகர்கள் தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர். அதில் சில கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.
அப்படி தமிழ் ஹீரோக்களுடன் இணைந்து கலக்கிய ஐந்து மலையாள ஹீரோக்கள் யார்? அவர்கள் நடித்த திரைப்படம் என்ன? என்பது குறித்து பார்ப்போம். கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் முதன்முறையாக மல்லு ஹீரோவான மம்முட்டி ரஜினியுடன் இணைந்து நடித்தார்.
அடுத்ததாக கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முறைமாமன் திரைப்படத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெயராமுக்கு கவுண்டமணியுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது.
இதனையடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். கடைசியாக விக்ரம் படத்தில் கமல் ஹாசனும், பகத் பாசிலும் இணைந்து நடித்தனர். இந்தியாவில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்களின் இதுவும் ஒன்று.