அதிர்ச்சி..! ஹாரி பாட்டர் புகழ் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்..!!

By admin on புரட்டாதி 29, 2023

Spread the love

ஹாரிபாட்டர் படங்களில் ஆல்பஸ் டம்பில்டோர் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் மைக்கேல் கேம்பன்(82). இவர் ஹாரிபாட்டர் படங்களில் பேராசிரியரான ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஹாரிபாட்டர் கதையை அடிப்படையாக வைத்து 8 படங்கள் வெளியானது. அதில் முதல் ஆறு படங்களில் மைக்கேல் நடித்துள்ளார்.

   

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் நாட்டின் முன்னணி நடிகராக அறியப்பட்ட மைக்கேல் கேம்பன் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.