CINEMA
சினிமாவை தாண்டி விவசாயத்தில் கலக்கும் நடிகர் ஜெயராம்.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்..
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம் அவர்கள்.
இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், ஏகன்,துப்பாக்கி மற்றும் பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இவருக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தற்போதும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே மூன்று பெயர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் ஜெயராமின் மகளும் சமீபத்தில் சினிமாவில் நடிக்க களமிறங்கினார்.
ஜெயராமின் மனைவி மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் அவர் தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததை அனைவரும் அறிந்தது தான்.
இவர்களைத் தொடர்ந்து ஜெயராமின் மகனும் மலையாள சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு வெற்றியை தந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து ஜெயராமின் மகள் மாளவிகா மாயம் செய்தாயோ பூவே என்ற இசையில் ஆல்பத்தில் அசோக் செல்வமுடன் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 7 வயதில் மலையாள திரைப்படமான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
சமீபத்தில் கூட இவர் தனது காதலியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் சினிமாவை தாண்டி நடிகர் ஜெயராம் விவசாயம் செய்து வருகின்றார்.
தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.