“வில்லன்” சமந்தா திருமணம் குறித்து ஒப்பனை கலைஞர் சாதனா சிங் சர்ச்சை பதிவு… கொந்தளித்த ரசிகர்கள்..!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love

நடிகை சமந்தா நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில் சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கிடையில் நாக சைதன்யா  நடிகை சோபிதாவை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஏற்கனவே திருமணம் ஆன தீ ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவருடன் சமந்தா நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் திருமண அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஒப்பனை கலைஞர் சாதனா சமந்தாவை மறைமுகமாக ‘வில்லன்’ என்று சித்தரித்து பதிவிட்டிருந்தார். இது சமந்தா ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், சாதனா இணையத்தில் விமர்சனத்திற்குள்ளானார்.