நம்மில் பலருக்கும் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பது மட்டும்தான் கனவாக இருக்கும். ஆனால் இது கனவில் மட்டுமே நடக்கும். இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படி ஒரு வேலை உள்ளது. அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு “கிரேட் பிளாஸ்கெட்” இங்கு 1953 ஆம் வருட முதல் மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும் அந்த தீவு சுற்றுலா தளமாக உள்ளது. இந்த தீவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தீவிற்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். இங்கு மின்சார வசதி இல்லாமல் கற்கால வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
சுற்றுலா வருபவர்கள் தாங்கள் ஏற்படுத்தும் குப்பைகளை செல்லும் போது அவர்களோடு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி சுற்றுலா செல்பவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் தங்குவதற்கான ஏற்பாடுகள் கொடுத்து உபசரிக்கும் இரண்டு பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு இங்கு தங்குவதற்கும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சவால் நிறைந்த இந்த வேலைக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அது கணவன் மனைவியாகவும், நண்பர்களாகவும் இருக்கலாம். அதன்படி இந்த வருடம் காமில்- ஜேம்ஸ் தம்பதியினர் பணியாற்றியுள்ளார்கள். உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் இதற்கான விண்ணப்பம் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தீவு குறித்த வீடியோவும் இது இந்த வேலை குறித்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
