அதிமுகவில் இபிஎஸ்ஸின் அதிரடி ‘ஸ்கெட்ச்’…. தூக்கப்பட்ட மா.செ.க்கள்… இரவோடு இரவாக அதிரடி மாற்றம்….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

அதிமுகவில் கட்சிப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் (மா.செ.) வீதம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

கழக அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துப் பொறுப்பாளர்களும், கட்சித் தொண்டர்களும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.