விஜய்-க்கு செக் வைக்க சீமானை சட்டசபைக்குள் கொண்டு வரும் திமுக?…. அம்பாசமுத்திரத்தில் ரகசிய டீல்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நகர்வாக, நாம் தமிழர் கட்சியை தற்போதைய சூழலில் கட்டுக்கோப்பாக வழிநடத்த ஒரு தேர்தல் வெற்றி அவசியம் என அக்கட்சியின் தலைமை கருதுவதாகத் தெரிகிறது; இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததால் வரவிருக்கும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடைத்தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராகக் களமிறக்க அக்கட்சியினர் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தவெகவின் அரசியல் வருகையையும் அதன் சவால்களையும் சட்டமன்றத்திற்குள் எதிர்கொள்ளும் ஒரு உத்தியாக, சீமானை பேரவைக்குள் கொண்டு வர திமுகவும் விரும்புவதாகவும் கூறப்படுவது தமிழக தேர்தல் களத்தில் புதிய விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.