FLASH NEWS: சிபிசிஐடி DIG உள்ளிட்ட 3 IPS அதிகாரிகள் மாற்றம்…. தமிழக காவல் துறையில் திடீர் அதிரடி….. இரவோடு இரவாக மாறிய உத்தரவு…!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

தமிழக காவல் துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி-யாக (DIG) பணியாற்றி வந்த வருண்குமார் ஐ.பி.எஸ், ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன் ஐ.பி.எஸ் சென்னை சிபிசிஐடியின் புதிய டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், நீண்ட நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு மூத்த காவல் அதிகாரியான ரகுபதி ஐ.பி.எஸ், சென்னை பள்ளிக்கரணை பகுதியின் புதிய உதவி ஆணையராக (Assistant Commissioner) நியமிக்கப்பட்டு புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் இந்த திடீர் பணியிடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.