சென்னை தாம்பரம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 47 வயது ரமேஷ் என்பவர் விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அவரது 45 வயது மனைவி பூங்கொடி, வீட்டிற்குச் சவாரிக்காக வந்த ராயபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் தாமோதரன் (33) என்பவருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே, 9 மாதங்களுக்கு முன்பு வீட்டின் இரும்பு கேட்டை பழுதுபார்க்க வந்த தாம்பரத்தைச் சேர்ந்த வெல்டர் ஜெய்சங்கர் (38) என்பவருடனும் பூங்கொடிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இருவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜெய்சங்கர் பூங்கொடிக்கு அதிகளவில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி, தனது முதல் கள்ளக்காதலன் தாமோதரனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் ஜெய்சங்கரின் தலையில் சரமாரியாகத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர். பின்னர் ஜெய்சங்கர் மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து நாடகமாடியுள்ளனர். உயிருக்குப் போராடிய ஜெய்சங்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலிஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பூங்கொடி மற்றும் தாமோதரனின் கொடூர நாடகம் அம்பலமாகவே, இருவரையும் பீர்க்கன்காரணை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
