அடே… இங்கெல்லாம் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது…. கனடாவில் அலப்பறை செய்த இந்தியப் பெண் கைது… நடந்தது என்ன?…

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

கனடாவின் சர்ரே பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நில உரிமையாளரான ராஜ் திவானா, தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தோட்டத்தில் மாட்டிறைச்சி சமைத்த போது ஏற்பட்ட தகராறில் அவரை மிரட்டி, தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகைதாரர் சமைத்த உணவைத் தட்டிவிட்டதோடு கல் வீசியதாகவும், கதவைக் கழற்றி எடுத்துச் சென்று பூட்டுகளை மாற்றியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாடகைதாரர் அளித்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் உள்ளூர் போலீசார் தற்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இச்சம்பவம் மாட்டிறைச்சி சார்ந்த மத அல்லது கலாச்சாரப் பிரச்சினையாகச் சித்தரிக்கப்பட்டு பரவி வந்தது. இருப்பினும், கனடாவில் பரவலாக மாட்டிறைச்சி உட்கொள்ளப்படும் சூழலில், இது உணவுக் கட்டுப்பாட்டால் எழுந்த விவகாரம் இல்லை என்று அந்நாட்டு ஊடகங்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டினர். வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையே நிலவிய சாதாரணப் பராமரிப்பு மற்றும் இடப் பகிர்வு தொடர்பான முரண்பாடே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

   

https://twitter.com/HateDetectors/status/2098667556529955077/video/1

   

இச்சம்பவம் குறித்து BOOM LIVE மேற்கொண்ட உண்மைச் சோதனையில் சர்ரே போலீஸ் சர்வீஸின் ஊடகத் தொடர்பு அதிகாரி இயன் மெக்டொனால்டு உண்மை நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். இது முழுக்க முழுக்க ராஜ் திவானாவுக்கும் வாடகைதாரருக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த தனிப்பட்ட வீட்டின் உரிமையாளர்-வாடகைதாரர் தகராறுதானே தவிர, மாட்டிறைச்சி விவகாரம் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.