புது பிசினஸ் தொடங்கிய மைனா நந்தினி.. இந்த ஐடியா பிரமாதமா இருக்கே.. வாழ்த்தும் நெட்டிசன்கள்..!!

By admin on ஆவணி 31, 2024

Spread the love

பிரபல நடிகையான மைனா நந்தினி சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீசான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் ரிலீசான வம்சம் திரைப்படத்தில் நடித்து மைனா நந்தினி பலராலும் அறியப்பட்டார். ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சீரியல் பக்கம் திரும்பி விட்டார்.

   

நந்தினி அழகி, அமுதா ஒரு ஆச்சரியக்குறி, மருதாணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார் ஆனால் மைனா நந்தினிக்கு பெரும் புகழை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலில் ரக்ஷிதாவுக்கு தோழியாக மைனா நந்தினி நடித்திருப்பார். காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மைனா நந்தினி மக்கள் மனதில் இடம் பிடித்தார். முதலில் இவர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

 

சில மாதங்களிலேயே கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த மைனா நந்தினி மீண்டும் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து சீரியல் நடிகர் யோகேஸ்வரனை மைனா நந்தினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

இப்போது திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் சைனா நந்தினி ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் பொன்னூஞ்சல் என்ற புடவை பிசினசை மைனா நந்தினி தொடங்கியுள்ளார். அதன் பிரமோஷன் பணிகளிலும் அவரை ஈடுபட்டுள்ளார். தனது பிசினஸ் பற்றி மைனா நந்தினி பகிர்ந்த போட்டோஸ் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)