என்ன ஆச்சு..? சோகமான பதிவை போட்ட மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர்.. அடுக்கடுக்கான கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..

By admin on சித்திரை 10, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு அணில் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

   

இந்நிலையில் மகாலட்சுமி தயாரிப்பாளரான ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் ரவீந்தர் ஒரு பண மோசடி வழக்கில் சிக்கி கைதானார். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

   

 

இதனையடுத்து உடல் நலம் சரியில்லாமல் போனதால் ரவீந்தரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று ரவீந்தர் வீடு திரும்பினார். இந்த நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு என்னை மிகவும் மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த சிலர் மகாலட்சுமியை விவாகரத்து செய்து விட்டீர்களா என கேள்வி உள்ளனர். அதற்கு ரவீந்தர் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது. அது சாத்தியமற்றது என பதில் கூறியுள்ளார்.