தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதில் தகுதி உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய…
பராபவ புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநில அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில்…
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பமாக, பரஸ்பர எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக கைகோர்க்க வாய்ப்புள்ளதாகத்…
தமிழகத்தின் அதிகார மையமான சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள "குறிஞ்சி" இல்லத்தைச் சுற்றி இப்போது அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது. நடந்து…