தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தினகரன் அறிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்த நிலையில் இபிஎஸ்-ஐ சிஎம் வேட்பாளராக ஏற்க முடியாது என தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார். அதோடு அமமுக வெற்றி கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்சை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்ற தினகரன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை "காலத்தின் கட்டாயம்" எனப் பொருள்படும் வகையில்…
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நிலவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அதிமுக நிர்வாகி…
தமிழக வெற்றிக் கழகத்தின் சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் "ஆணவத்தின் உச்சம்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்…
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-விடம் ஆதரவு கேட்டு வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான தீவிர…