தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் பரிசாக 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் .
இதனைத் தொடர்ந்து ஜனவரி 8ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். டோக்கன் விநியோகம் செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக மகளிர் உரிமை தொகையையும் முன்கூட்டியே வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக மாதத்தின் 15 ஆம் தேதி வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இந்த மாதம் 9ம் தேதியே வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
