தீபாவளி பரிசு… குடும்பத் தலைவிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… காலையிலேயே குட் நியூஸ்…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. புதிதாக விண்ணப்பித்துள்ள குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் தீபாவளி பரிசாக அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது.