மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வு.. இவர்களும் விண்ணப்பிக்கலாம்.. அரசு சூப்பர் அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 17, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மீண்டும் வழங்குவதற்கான விண்ணப்பதிவு தற்போது நடைபெற்று வரும் விலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் இருக்கும் தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மானிய திட்டத்தில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி அவர்களின் குடும்ப பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.