“5 வருஷத்துல 4 கட்சி மாறிய சீனியர் டாக்டர் சரவணன்”…. பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு ‘செக்’…. தவெகவில் திடீர் பரபரப்பு…..!

Spread the love

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகியும் மருத்துவருமான சரவணன், தற்போது அக்கட்சியின் தலைமையிடம் மாநில அளவிலான உயரிய பொறுப்பைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக, பாஜக, அதிமுக மற்றும் தற்போது தவெக என நான்கு கட்சிகளுக்கு மாறிய வரலாற்றுக்கு சொந்தக்காரரான இவர், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் அங்குள்ள மூத்த நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர் என மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னதாக, திமுகவில் இருந்தபோது மாவட்டச் செயலாளர்களான தளபதி மற்றும் மூர்த்தி ஆகியோருடனும், அதிமுகவில் இருந்தபோது செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் போன்ற மூத்த தலைவர்களுடனும் இவருக்குத் தொடர் மோதல் போக்கு நீடித்தது. இதனால் அங்கெல்லாம் இவரால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற முடியாமல் போனது. இந்நிலையில்தான், மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகளைச் கலந்தாலோசிக்காமல், நேரடியாகத் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சரவணனின் இந்த அதிரடி நகர்வு மதுரை மாவட்ட தவெக மூத்த நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தங்களது பதவிகளுக்கு இவரால் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள மதுரை மாவட்ட நிர்வாகிகள், இவரைப் முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கியே வைக்கின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு இவருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை என்றும், கூட்டங்களுக்கு வந்தாலும் தகுந்த மரியாதை அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், இது குறித்து உள்ளூர் நிர்வாகிகளிடமே நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு உள்ளூர் நிர்வாகிகள், “கட்சியில் மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்களுக்கே மரியாதை கிடைக்கும்; எனவே நீங்களும் தலைமையிடம் சென்று பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள், மரியாதை தானாக வரும்” என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, மீண்டும் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்த சரவணன், தனக்குக் கண்டிப்பாக மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார். இருப்பினும், இவரது கோரிக்கையைக் கேட்டுக் கொண்ட புஸ்ஸி ஆனந்த், எந்தவித சாதகமான பதிலோ அல்லது சிக்னலோ கொடுக்காமல் அவரை அனுப்பி வைத்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

என்ன சிஎம் சார் இதெல்லாம்?… விஜய் கைவசம் இருக்கும் துறையிலேயே லஞ்சமா?…. வெளியான அதிர்ச்சிப் புகார்….!

ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…

7 minutes ago

“கைதான MLA.. சைலண்டான உதயநிதி”…. பின்னணியில் நடக்கும் மாபெரும் ஸ்கெட்ச்…. தலைதூக்கும் புதிய அரசியல் குழப்பம்….!

திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…

15 minutes ago

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிய கொங்கு மண்டலம்?… வேலுமணி, தங்கமணி எடுத்த பகீர் முடிவு….!

அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…

22 minutes ago

BREAKING: இரவோடு இரவாக கைது… CM விஜய்க்கு அதிகாலையிலேயே அடுத்த அதிர்ச்சி….!

ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள…

27 minutes ago

டெல்லி பாணியில் தமிழக போலீஸ்..? ‘நேம் பேட்ச்’ இல்லாமல்… மாணவர்களைத் தூக்கிய கொடூரம்… தவெக அரசுக்கு கேள்வி…! கொதிக்கும் தமிழகம்…!

நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்றத்தை…

44 minutes ago

“யார் சாமி நீ… 3 நாள் ஃபர்ஸ்ட் மனைவி… 3 நாள் செகண்ட் மனைவி… 1 நாள் லீவ்…!” – 2 மனைவிகளுடன் கணவன் வாழ… பஞ்சாயத்து போட்ட வினோத கண்டிஷன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…

1 மணத்தியாலம் ago