நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில், டெல்லி காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர் தங்கள் சட்டையில் ‘நேம் பேட்ச்’ அணியாமல் இருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகவும், காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்தும் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், இப்போராட்டங்களுக்கு அனுமதி மறுத்த தமிழகக் காவல்துறை, மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வருகிறது. மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர் தலைவர்களைக் கைது செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், போராட்டக் களங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் மாணவர்களைக் கைது செய்த தமிழகக் காவல்துறையினரும் தங்கள் சீருடையில் ‘நேம் பேட்ச்’ அணியாமல் இருந்தது மீண்டும் பெரிய விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி காவல்துறையின் அதே சர்ச்சைக்குரிய அணுகுமுறையைத் தமிழகக் காவல்துறையும் பின்பற்றி வருகிறதா என்றும், இதற்கு முதலமைச்சர் விஜய் அனுமதி அளித்துள்ளாரா என்றும் பல்வேறு அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…