என் மனைவி இறந்தப்ப நிகழ்ந்த சம்பவம்.. அதை பார்த்து மனச தேத்திக்கிட்டேன்.. மதுரை முத்து எமோஷனல் பேட்டி..!

By Mahalakshmi on ஆனி 11, 2024

Spread the love

ஸ்டாண்ட் அப் காமெடியனான மதுரை முத்து தனது மனைவி இறந்தபோது நடந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கி வருபவர் மதுரை முத்து. பல வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்த போதும் அதனை ஏற்காமல் தொடர்ந்து சின்ன திரையில் மட்டுமே பயணித்து வருகிறார். ஸ்டாண்ட் காமெடி செய்வதில் கில்லாடியான இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்திருக்கின்றார்.

   

   

நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வரும் மதுரை முத்துவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. இவர் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் இரண்டு பெண் குழந்தை பெற்றெடுத்தார். தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னை திரும்பி கொண்டு இருந்தபோது அவரது மனைவி லேகா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

தனது கண் முன்னே மனைவி உயிர் இல்லாததை எண்ணி மிகவும் வருத்தத்தில் இருந்த மதுரை முத்து இரண்டாவது திருமணம் வேண்டவே வேண்டாம் என்று இருந்தார். பின்னர் தனது குழந்தைகளுக்காக  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்த லேகாவின் நெருங்கிய தோழியான நீத்து என்கின்ற பல் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு மகள், மகன் மனைவி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் மதுரை முத்து அண்மையில் பிரமாண்டமாக வீடு ஒன்றைக் கட்டி இருந்தார். அதில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் மதுரை முத்து சமீபத்தில் பேட்டி ஒன்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

அதில் அவரது முதல் மனைவி இறப்பு குறித்து கூறியிருந்தார். தனக்கு விருப்பமானவர்கள் யாரும் தன்னுடன் நீண்ட காலம் பயணிக்க மாட்டார்கள். எனக்கு தாய் இல்லை, தந்தை இல்லை, மனைவி இல்லை என வருத்தமாக பேசி இருந்த மதுரை முத்து எனது மனைவி இறந்தபோது சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு மிகப்பெரிய ஆக்சிடென்ட் நடந்தது. அதில் அப்பா அம்மா இருவரும் தவறிவிட்டார்கள். ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் பிழைத்தது.

இதை பார்த்த நான் என் குழந்தைகளுக்காவது அப்பா என நான் இருக்கின்றேன். அந்த குழந்தைக்கு அப்பா அம்மா இருவருமே இல்லை என்று எண்ணி மனசை தேற்றிக்கொண்டேன். நம் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் வளர்த்தேன். மேலும் எனது மனைவியிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வரதட்சணையாக பெற்றது கிடையாது. இரண்டாவதாக தற்போது திருமணம் செய்து கொண்டிருந்த மனைவியிடம் இருந்தும் நான் வரதட்சணை வாங்கியது இல்லை என்று பெருமையாக பேசி இருந்தார். அனைத்தும் எனது உழைப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்பவன் நான் என கூறியிருந்தார்.