தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நடிகர் ஆர்யா.. தரமான சம்பவம் பண்ண கபிலன்..!

By Mahalakshmi on ஜூன் 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆரியா. போலாந்து நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்ட மூன்று இந்திய வீரர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார்.

   

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக தன்னுடைய சிறப்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார் . ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகின்றார்.

   

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. சினிமாவில் எப்படி நடிப்பில் டெடிகேஷனாக இருந்து வருகிறாரோ? அதே அளவுக்கு பிட்னஸிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

 

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார். கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர்கள் காப்பான் மட்டும் டெடி திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள்.

பின்னர் குழந்தை பெற்றுக் கொண்ட சாயிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு பத்து தல என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். நடிகர் ஆர்யா பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் அதே அளவுக்கு சைக்கிளிங் மீதும் அதிக ஆர்வம் உடையவர். இவர் சமீப காலமாக வெளிநாடுகளில் நடக்கும் சைக்கிளிங் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் போலந்து நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் என்ற போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட 3 வீரர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. அந்த போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shaheen (@shhaheen)