மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலையில் நேரிட்ட கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது நான்குவழிச்சாலையில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த அதிர்ச்சிகரமான மோதலில் அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் வீரியத்தால் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…
பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…