பதறவைக்கும் காட்சி..! 40 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டு வெடித்துச் சிதறிய கார்.. மொஹரம் ஊர்வலத்தில் நடந்த பகீர் சாகசம்.. 4 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பட்நகர் பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, கிரேன் மூலம் ஒரு காரை சுமார் 40 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெடிக்கச் செய்த ஆபத்தான சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே காரை உயரே தூக்கியபோது, அதன் மேல் இரண்டு இளைஞர்கள் சிவப்பு கொடிகளை அசைத்துக் கொண்டு நின்றனர். அதன் பிறகு காரின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு, அதற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகள் ஒரே நேரத்தில் பற்றவைக்கப்பட்டதால், பலத்த சத்தத்துடன் கார் வெடித்துச் சிதறியது. இந்த அதிர்ச்சிகரமான சாகசம் பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால், பொதுமக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக உஜ்ஜையினி காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கார் என்ஜின் அணைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பட்டாசு புகையினால் ஏற்பட்ட அழுத்தமே இந்த வெடிப்பு போன்ற காட்சிக்குக் காரணம் என்றும், இந்தச் சாகசத்திற்கு அரசிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சோயிப் கான், கொடி அசைத்த ஜாஹித் கான், தஸ்லிம் மற்றும் கிரேனின் உரிமையாளர் கோபால் மாலி ஆகிய 4 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

11 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

24 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

45 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago