தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்த ஜாய் கிரிசில்டா.. சர்ச்சைக்கு நடுவே மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்ட புகைப்படமும் தான் ஆறு மாத கால கர்ப்பமாக இருப்பதுமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டார்  பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாக் ரிசல்டா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆகிவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். இது பர பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். இது குறித்து மாதம் பட்டி ரங்கராஜ் எந்த ஒரு கருத்துமும் தெரிவிக்கவில்லை.

மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் / Joy Crisilda Wedding photo - Madampatti Rangaraj issue

   

இந்நிலையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக ஊடக கணக்கிலிருந்து ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது பிரபல நடிகர் பிரேம் குமாரின் மகனின் திருமணத்திற்கு உணவு பரிமாறும் அனுபவத்தை அவர் தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி போன்ற பிரபலங்களுக்கு அவர் உணவு பரிமாறுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

   

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார் - ஜாய் கிரிசில்டா

 

மேலும் அந்தப் பதிவில், திருமணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் சில வாழ்நாள் முழுவதும் நினைவுகளாக மாறும். நடிகர் பிரேம் அண்ணாவின் மகன் கவுசிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமன் திருமணத்தில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். மாதம்பட்டி கேட்டரிங் உணவை மட்டுமல்ல அழகான ஜோடிக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது என்று பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

T.P.Rangharaaj பதிவைப் பகிர்ந்துள்ளார் (@madhampatty_rangaraj)