அண்ணன் போட்ட ‘ஷாக்’ கமெண்ட்.. அப்செட்டில் தம்பி… ஸ்டாலினை உலுக்கிய அழகிரியின் அந்த ஒரு வார்த்தை..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

திமுக உடன்பிறப்புகளுக்குத் தொடர்ந்து அன்பு மடல் எழுதி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சொந்த அண்ணன் மு.க. அழகிரி மீது மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. வாக்கு செலுத்திவிட்டு வெளியே வந்த அழகிரி, ‘யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்’ என்று மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இது திமுகவின் வெற்றியை அவர் உறுதிபடக் கூறாதது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், அழகிரியின் மகளும் திமுக ஆட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த அண்ணனும், அவர் மகளுமே திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்ல முன்வராதது ஸ்டாலினை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் இந்த மறைமுக எதிர்ப்பும், மௌனமும் தேர்தல் களத்தில் திமுகவிற்குப் பின்னடைவாக அமையுமோ என்ற விவாதம் தற்போது அரசியல் மேடைகளில் எழுந்துள்ளது.